பீகார் மாநிலம் மெல்ல மெல்ல வளர்ச்சியை நோக்கி முன்னேறும் போது, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் மாநிலத்தை அவமதிப்பதில் பிசியாக இருப்பதாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். பீகாரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசிய அவர், காங்கிரஸ், ஆர்ஜேடி-யுடன் கூட்டு சேர்ந்து, சமூக ஊடகங்களில் பீகாரை கேலி செய்வதிலும், மாநிலத்தை பீடியுடன் ஒப்பிடுவதிலும் மும்முரமாக உள்ளதாக சாடினார். சமீபத்தில் பீடி மற்றும் பீகாரை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், அதற்கு பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.இதையும் படியுங்கள் : பீகாரில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் ”NDA கூட்டணிக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பேன்”