ஒருவர் மீது கிரிமினல் புகார் அல்லது குற்றச்சாட்டு எழுந்தாலே அவரது வீட்டை புல்டோசர் கொண்டு இடிக்க வேண்டும் என்று என்ன தேவை உள்ளது? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம்,குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள், கட்டிடங்களை புல்டோசர் கொண்டு இடிக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.