மகனை கொன்றதாக பஞ்சாப் முன்னாள் டிஜிபி மற்றும் அவரது மனைவியும் மாநில காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும் கைதான நிலையில், கொலைக்கான காரணங்கள் குறித்த பல புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. முன்னாள் டிஜிபி முகம்மது முஸ்தபாவின் மகன் 35 வயதான அகில் அக்தரின் மரணம் முதலில் இயற்கையானது என கருதப்பட்டாலும், தம்மை கொல்ல தமது குடும்பத்தினர் திட்டமிட்டதாக அவர் இறப்பதற்கு முன்னர் வெளியிட்ட வீடியோவால் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. தமது மனைவிக்கும் தந்தைக்கும் இடையே தகாத உறவு இருந்த தாகவும் அதை தாம் கண்டுபிடித்த தால் தம்மை கொல்ல திட்டமிடுவதாகவும் அகில் அக்தரின் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது, தன்னை போலி வழக்கில் சிக்க வைத்து சிறையில் அடைக்கவும் தமது தாய், தந்தை மற்றும் சகோதரி திட்டமிட்டதாகவும் வீடியோவில் அகில் கூறுவது பதிவாகி உள்ளது.