உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் அதிவேகமாக சென்ற கார் சாலையில் தடுப்பில் இருந்த விளம்பர பலகை மீது பலமாக மோதி விபத்துக்குள்ளான பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.சாலை தடுப்பில் ஏறி விளம்பர பலகையின் கம்பத்தில் மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. இவ்விபத்தால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் காரில் வந்த ஆறு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.