இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சிர்மௌர் (( Sirmaur )) மாவட்டத்தில் இருந்து சிம்லா நோக்கி சென்ற தனியார் பேருந்து மலைப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குப்வி பகுதியில் (( Kupvi to Shimla )) இருந்து சிம்லா நோக்கி சென்ற போது இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், பல பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அருகில் இருந்தவர்கள் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.