தமது கட்சிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையின் காரணமாக வரும் பிப்ரவரி மாதம் வங்கதேசத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலை புறக்கணிப்பதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், லட்சக்கணக்கான வாக்காளர்களை உறுப்பினர்களாக கொண்ட அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றார். மேலும், அவாமி லீக் அல்லாத வேறு கட்சி ஆட்சி செய்யும் வங்க தேசத்தில் தாம் குடியேறப் போவதில்லை என்றும் இந்தியாவில் தாம் சுதந்திரமாக வாழ்வதாகவும் கூறினார்.