சிறு வயதில் இருந்தே பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்வேறு பாலியல் குற்றங்களுக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவனுக்கு ஜாமின் வழங்கிய வழக்கில் நீதிபதிகள் சஞ்சய் குமார், அலோக் ஆராதே ஆகியோர் இவ்வாறு கருத்து தெரிவித்தனர். ஒன்பதாம் வகுப்பு முதல் பாலியல் கல்வி கற்பிப்பதற்கு பதிலாக சிறு வயதில் இருந்தே பாலியல் கல்வியை பயிற்றுவிப்பது குறித்து கல்வி அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தினர். அப்படி கற்பித்தால், பருவம் அடைவது, அதன் பின்னர் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படும் எனவும் நீதிபதிகள் கூறினார்.