ஜம்மு&காஷ்மீரில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் இரண்டு பேரை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் எனவும், மற்றொருவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். விடுதி அறையில் தங்கும் சுற்றுலா பயணிகள் குறித்த தகவல்களை விடுதி உரிமையாளர்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.