விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கியதில் தொடர்ந்து விதி மீறல்களை நடத்திய மூன்று மூத்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யுமாறு, ஏர் இந்தியாவுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. உரிமங்கள், ஓய்வு உள்ளிட்டவற்றை பரிசீலிக்காமல் விமான ஊழியர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக ஏர் இந்தியாவே தாமாக முன்வந்து தெரிவித்த தகவலின் அடிப்படையில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. தவறு செய்யும் அதிகாரிகள் மீது ஏர் இந்தியா நிறுவனம் கடும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் விமான சேவையில் சமீபத்தில் பல குளறுபடிகள் ஏற்படுவதாகவும் ஏர் இந்தியாவுக்கு அனுப்பிய ஆணையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.இதையும் படியுங்கள் : பழைய வாகனங்களுக்கு இனி டெல்லியில் எரிபொருள் கிடையாது..