அசாம் உடன்படிக்கையை அங்கீகரிக்கும் சட்டப்பிரிவு 6ஏ செல்லும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை கண்டறிந்து வெளியேற்ற கோரி, 1979 முதல் 1985 வரை தொடர்ந்து 6 ஆண்டுகளாக மாணவர் அமைப்பினர் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து மாணவர் அமைப்பினருடன் அரசு மேற்கொண்ட உடன்படிக்கையில், 1966 ஜனவரி 1 முதல் 1971 மார்ச் 24 நள்ளிரவுக்கு இடையில் குடியேறியவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. இந்த கால கட்டத்துக்கு பிறகு குடியேறுபவர்கள் சட்டவிரோத வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அசாம் உடன்படிக்கையை அங்கீகரிக்கும் குடியுரிமை சட்டப் பிரிவு 6ஏ செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.