மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் மாநில காவல்துறை இணைந்து கூட்டாக நடத்திய சோதனையில், ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 13, 14 ஆகிய தேதிகளின் இடைப்பட்ட இரவில், மணிப்பூர் காவல்துறை, மத்திய பாதுகாப்பு படை, ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையின் கூட்டுக் குழுக்களால் 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களின் புறநகர் பகுதிகளில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையின் போது, 328 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மணிப்பூர் காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.