சர்தார் வல்லபாய் படேலின் 150ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படம் பொறித்த சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.சுதந்திர போராட்ட வீரரும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150 ஆவது பிறந்த்நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக குஜராத் மாநிலம் கேவாடியாவுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு சர்தார் வல்லபாய் படேலின் குடும்பத்தினரை சந்தித்து கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.