கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் சஞ்சு சாம்சனை 26 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு கொச்சி புளூ டைகர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம் கேரளா கிரிக்கெட் லீக்கில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். கே.சி.எல் லீக்கின் இரண்டாவது சீசன் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.