உத்தரபிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் பாதுகாப்பு தயார் நிலை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. லக்னோ மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் மீட்புப் படை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், திடீரென தீ விபத்து ஏற்பட்டால் துரிதமாக செயல்பட்டு மக்களை காக்கும் முறைகள் தத்ரூபமாக விளக்கப்பட்டன.