கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றஞ்சாட்டி ஐடி ஊழியரான ஆனந்து அஜி என்பவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வயநாடு காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். தமக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பாலியல் தொல்லை தருவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட இந்த இளைஞரின் சடலம் திருவனந்தபுரம் தம்பானூரில் உள்ள அறையில் இருந்து மீட்கப்பட்டது. தனக்கு மட்டுமின்றி நாடு முழுதும் உள்ள ஆர்எஸ்எஸ் முகாம்களிலும் பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக இவர் தற்கொலை செய்யும் முன்னர் பதிவிட்டார்.இது குறித்த தமது சமூக வலைதளத்தில் தற்கொலைக்கு காரணமாக கூறப்படும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரியங்கா கேட்டுக் கொண்டுள்ளார்.