மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தை நம்பி சுமார் 4 கோடி ரூபாயை இழந்த நபர் பணத்தை மீட்டு தரக் கோரி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புனேவில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் நபர், வாட்சப் குரூப்பில் சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி பணத்தை முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. பல்வேறு சந்தைகளில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் பார்க்கலாம் என்ற ஆசை வார்த்தையை நம்பிய நபர், கடந்த மே முதல் அக்டோபர் வரை 3.96 கோடி ரூபாயை பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து கண்மூடித் தனமாக முதலீடு செய்துள்ளார். பணம் பரிமாற்றம் செய்தவுடன் மர்ம நபர்களின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதாக வேதனையும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.