உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் உள்ள மலை சரிவிலிருந்து பாறைகள் உருண்டு விழுவதையடுத்து கேதர்நாத் கோவிலுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. சமோலி மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த பலத்த மழையால், மலை சரிவிலிருந்து பெரிய பாறைகள் சாலையில் சரிந்த வண்ணம் உள்ளன. இதனால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் பனேர்பானி, பிபல்கோட்டி அருகே சாலை துண்டிக்கப்பட்டுள்ளதாக சாமோலி காவல்துறை தெரிவித்துள்ளது. மழைக்காலங்களில் இந்தப் பகுதி அடிக்கடி நிலச்சரிவுகளை சந்தித்து வரும் நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இங்கு நெடுஞ்சாலை துறை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது. இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் மேலும் 2 இடங்களில் மினி டைடல் பூங்கா..