உத்தரபிரதேசம் மாநிலம் சோன்பத்ராவில் உள்ள கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் 15 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கல் குவாரியில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இவ்விபத்து நடந்தேறியதாக சொல்லப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.