கேரள மாநில ஏ.டி.எம்களில் கொள்ளையடிக்க வடமாநில கொள்ளையர்கள் பயன்படுத்திய பொருட்கள் திருச்சூரில் ஆற்றில் மீட்கப்பட்டன. திருச்சூரில் உள்ள ஏ.டி.எம்களில் கைவரிசை காட்டி விட்டு தப்பிய வட மாநில கொள்ளையர்கள் நாமக்கல்லில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களை திருச்சூரில் உள்ள தாணிக்குடம் ஆற்றில் வீசியது தெரிய வந்தது. இதனையடுத்து கொள்ளையர்களை அழைத்து கொண்டு திருச்சூருக்கு சென்ற போலீசார், நீச்சல் வீரர்கள் உதவியோடு 12 ஏ.டி.எம் இயந்திர தட்டுகள் மற்றும் 2 கேஸ் கட்டர்களை மீட்டனர்.