மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையால் பஹல்காம் தாக்குதல் நிகழ்ந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவையில்இந்திய ஆயுதப்படையினரை பாராட்டி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது பேசிய அவர், முப்படைகளின் வீரத்தை பாஜக அரசியலாக்குவதாக சாடினார். பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் பாதுக்காப்பு படையினர் இல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய மம்தா பானர்ஜி, இந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிய பாஜக அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.