''பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், இதுவரை 42 வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, ஏன் இதுவரை மக்கள் இறந்து கொண்டிருக்கும் மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார ரீதியிலான ஜாதிவாரி கணக்கெடுப்பை தெலுங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு செய்து வருவதாகவும், இது ஒட்டு மொத்த நாட்டிற்கும் உதாரணமாக மாறி உள்ளது எனவும் கூறினார்.