தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி 3 ஆயிரத்து 548 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்பி வில்சன் வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் பேசிய அவர் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்கவேண்டிய 3 ஆயிரத்து 112 கோடி ரூபாய் நிதி மற்றும் நெல் கொள்முதல் மற்றும் மானியங்களுக்கான நிலுவைத் தொகை 2 ஆயிரத்து 670 கோடி ரூபாயை வழங்க வலியுறுத்தினார்.