பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் பிற பகுதிகளுக்கு நிவாரண நிதி உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதியான மற்றும் தாராளமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் தொகுப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.