டாடா குழும தலைவர் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரக்க குணத்தின் கலங்கரை விளக்கம் என புகழாரம் சூட்டினார். அதேமாதிரி, தொழில் நேர்மையினாலும், வள்ளல் தன்மையாலும், சமூக சேவையாலும், ரத்தன் டாடா பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.