தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சீர்திருத்த நடவடிக்கைக்கு எதிராக பீகார் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. பீகார் மாநிலத்தில் இத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும்படி, கடந்த மாதம் 24ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஒவ்வொரு வாக்காளரின் ஓட்டுரிமையை உறுதி செய்யவும், பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை உருவாக்கவும் இந்த நடவடிக்கை அவசியமானது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. ஆனால் இதற்கு காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இதையும் படியுங்கள் : முன்னாள் துப்புரவு தொழிலாளி அதிர்ச்சி புகார் தர்மஸ்தலா கோவிலில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமை..!