மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில், உள்நாட்டு பசு இனங்களுக்கு மாநில தாய்ப்பசு என பொருள்படும் ராஜ்யமாதா-கோமாதா அந்தஸ்தை மாநில அரசு வழங்கி உள்ளது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக துணை முதல்வர் தேவேந்திர பட்ணவிஸ் தெரிவித்தார்.