கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.கனமழை காரணமாக எர்ணாகுளம்,இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஏழு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.கொல்லம், பத்தனம்திட்டா,ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணா குளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் 11 முதல் 20 சென்டி மீட்டர் வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதனிடையே, வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை சூரல்மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய் வதால், ஆற்றில் செம்மண் கலந்த நீர் கரைபுரண்டு ஓடுகிறது.இதனால் பெயிலி பாலத்தின் கரைகள் அரிக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : "பேச்சுவார்த்தை மூலம் நாடுகளுக்கிடையேயான பிரச்னை தீர்க்கலாம்"