பொறுப்பற்ற தன்மைக்கு முகமாக ஒருவர் இருக்கிறார் என்றால் அது மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தான் என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். பொதுவாழ்வில் இருந்தவர்கள் தற்போது இல்லாத நிலையிலும் கூட அவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வீசுவது ராகுலுக்கு வழக்கமாகி விட்டதாக நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.