மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதே போல் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை ஒட்டி, விஜய் காட்டில் உள்ள அவரது நினைவிடத்திலும் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.