மக்களவை 2026: 2020 ல் சீனாவுடனான ஏற்பட்ட எல்லை மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் பேச மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அனுமதிக்க வேண்டும் என திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் வலியுறுத்தி உள்ளார். எலும்பு முறிவு ஏற்பட்டு சக்கர நாற்காலியில் மக்களவைக்கு வந்த அவர், கால்வன் தாக்குதல் குறித்த தரவுகள் பொது வெளியில் இருக்கும் போது , அது குறித்து ராகுல் பேசுவதில் என்ன தவறு என பாஜக தரப்பை நோக்கி கேள்வி எழுப்பினார். ராகுலை பேச அனுமதிக்காமல் இருந்தால் பிரச்சனை பெரிதாகும் என்றார் அவர். கால்வன் தாக்குதல் குறித்து முன்னாள் ராணுவ தலைமை தளபதி எம்எம் நரவணேயின் வெளிவராத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டதை குறித்து ராகுல் காந்தி மக்களவையில் பேசும் போது ஆளும் தரப்பினர் கூச்சலிட்டு அதை தடுத்த து குறிப்பிடத்தக்கது. Related Link இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கும் என ரஷ்யா நம்பிக்கை