கேரளாவில் மிக நீளமான ஜிப்லைனில் ((zipline)) காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பயணம் மேற்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. வயநாடு இடைத்தேர்தலை ஒட்டி கராப்புழா அணைப்பகுதிக்கு பிரியங்கா காந்தியுடன் வருகை தந்த அவர், ஜிப்லைனில் பயணம் மேற்கொண்டது குறித்து பகிர்ந்துள்ளார். அதில் தென்னிந்தியாவின் மிகப் பெரிய ராட்சத ஊஞ்சல் என வர்ணித்தார்.