பிரதமர் மோடி அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை படித்து பார்த்ததில்லை என மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி வெறுமனே அரசியலமைப்பு சட்டத்தை காட்டி அரசியல் செய்வதாக பிரதமர் விமர்சித்ததற்கு, ராகுல் இவ்வாறு பதிலடி தந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், மோடி தனது வாழ்க்கையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை படித்திருக்கமாட்டார் என்றும் அதனால் தான் அவருக்கு அரசியலமைப்புப் புத்தகம் வெற்று புத்தகமாகத் தெரிகிறது என்றும் சாடினார்.