இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 63 லட்சத்து 66 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இறப்பு, இடமாற்றம், இரட்டை பதிவு போன்ற காரணங்களால் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் 7 கோடியே 66 லட்சமாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, SIR நடைமுறைக்கு பிறகு 7 கோடியே 4 ஆயிரமாகக் குறைந்துள்ளது. எனினும், இந்த வாக்காளர்களின் விவரங்கள் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, மாவட்ட நீதிபதிகளால் சரிபார்க்கப்படும். Related Link ஆலையில் இருந்த பட்டாசுகள் முழுவதுமாக வெடித்து சிதறின