அசாமின் கொக்ரஜார் (( Kokrajhar )) பகுதியில் பதற்றத்தை தணிக்கும் விதமாக 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய தள சேவை துண்டிக்கப்பட்டது. தொடர் கால்நடை திருட்டில் ஈடுபட்ட வந்த கும்பல் என நினைத்து சாலைப் பணியில் ஈடுபட்டவர்களின் வாகனத்தை உள்ளூர் மக்கள் துரத்தி சென்று தீ வைத்து எரித்தனர். இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரின் இறப்புக்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : சிகரெட் பிடித்த படி காரை அதிவேகமாக ஓட்டிய இளைஞர்கள்