புதிய அரசியல் சாசனத்தை எதிர்த்து வங்கதேசத்தில் போராட்டம் வெடித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் விரட்டியடித்தனர். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற புரட்சியை அடுத்து ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்தது. தற்போது இடைக்கால அரசாங்கத் தலைவராக உள்ள முகமது யூனுஸ், ஜூலை புரட்சியை வைத்து ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டதன் மூலம் 'புதிய வங்கதேசத்தின் பிறப்பு' என்று அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பாராளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.