வருடாந்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி திருமலை முழுவதும் வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை வருடாந்திர பிரமோற்சவ விழா தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏழுமலையான் கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. மேலும் மலைப்பாதை முழுவதும் மின் விளக்குகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டடுள்ளது.