மணிப்பூரில் தடை செய்யப்பட்ட ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த எட்டு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் பறிமுதல் செய்தனர். தவுபால் மாவட்டத்தில், மக்களை அச்சுறுத்தி வந்ததாகவும், அங்கு நடந்து வரும் நில மறு அளவீடு பணிகளை தடுத்ததாகவும் கூறி இவர்கள் கைது செய்யப்பட்டதாக மணிப்பூர் போலீஸ் தெரிவித்துள்ளது.