உத்தரகாண்டில் சிறை வளாகத்தில் நடந்த ராமலீலா நாடகத்தில் வானர வேஷம் போட்ட இரண்டு கைதிகள் சீதாவை கண்டுபிடிக்கும் காட்சியில், ஏணி வைத்து சிறையில் இருந்து தப்பிய சம்பவம் நடந்துள்ளது. ஹரித்வாரில் உள்ள ரோஷனாபாத் சிறையில் ஆண்டு தோறும் ராமலீலாவின் போது இராமயண நாடகம் போடுவது வழக்கம். அது போன்று நேற்று மாலை நடந்த நாடகத்தில் இரண்டு கைதிகள் வானர வேடம் போட்டனர். அதில் சீதா தேவியை தேடுவதாக கூறும் காட்சியின் போது சிறையின் பின்பக்கம் சென்று ஏணி வைத்து தப்பினர். சீதா வேடம் போட்டவர் திரும்பி வந்த பிறகும் வானர கைதிகள் வராததால் உஷாரான அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது ஏணி வைத்து அவர்கள் தப்பியது தெரிய வந்தது. இரண்டு கைதிகளும் கொலை மற்றும் ஆட்கடத்தல் வழக்கில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.