ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி உலக நாடுகளுக்கு எடுத்துரைத்த அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுக்களை பிரதமர் மோடி இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூரின் நோக்கம் குறித்து 33 நாடுகளுக்கு பயணம் செய்து அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவினர் விளக்கம் அளித்தனர். இந்நிலையில், அவர்களை இன்றிரவு 7 மணிக்கு தனது இல்லத்தில் சந்திக்கும் பிரதமர் மோடி, உலக நாடுகளிடம் கிடைத்த வரவேற்பு மற்றும் கருத்துகள் குறித்து கேட்டறிவார் என கூறப்படுகிறது.