லாவோஸ் நாட்டிற்குப் பிரதமர் மோடி அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. லாவோஸில் 21வது ஆசிய இந்தியா உச்சி மாநாடு மற்றும் 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு லாவோஸ் நாட்டு பிரதமர், இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். அதனடிப்படையில் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.