பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றுள்ள சீன் அதிபர் ஜின் பிங்கை, பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசவுள்ளார். சரியாக 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளிடையே துாதரக உறவுகள், ராணுவம் மற்றும் எல்லையில் ஏற்பட்டுள்ள உடன்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படலாம்.