குஜராத்தில் உள்நாட்டு ராணுவ விமான உற்பத்தி ஆலையை ஸ்பெயின் பிரதமருடன் சேர்ந்து பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான சி-295 ரக சரக்கு விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இதுவே உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் ராணுவ போக்குவரத்து விமானம் ஆகும்.