இனி பாகிஸ்தான் அத்துமீறும் பட்சத்தில் இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும் என பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் மே 10ஆம் தேதி மாலை 5 மணி உடன் முடிவடைந்த நிலையில், அடுத்த மூன்று மணிநேரங்களிலேயே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலை நடத்தியது. இந்நிலையில் ஞாயிற்றுகிழமை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை ஒழிக்காமல் விடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.