பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கைக்கு மத்தியில் திங்கள்கிழமை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் இந்தியா வருகிறார். குடும்பத்துடன் வருகை தரும் துணை அதிபருக்கு பிரதமர் மோடி இரவு விருந்தளிக்க உள்ளார். மேலும் பரஸ்பர வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.