அசாமை சேர்ந்த பிரபல பாடகர் ஜூபீன் கார்க் மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.இசைத்துறைக்கு ஜூபீன் கார்க் ஆற்றிய பணியால் என்றென்றும் நினைவுக்கூரப்படுவார் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஜூபீன் கார்க் திறமை உண்மையில் நிகரற்றது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி புகழஞ்சலி செலுத்தினார்.