16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பே `பிரிக்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கூட்டமைப்பின் 2024ம் ஆண்டுக்கான மாநாடு ரஷ்யாவின் காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ரஷ்யா அதிபர் புதின் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரஷ்யா புறப்பட்டார். தனது பயணத்தின்போது, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.