உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, அங்கு 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 870 கோடி ரூபாய் மதிப்பில் விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.