பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரையும் விமர்சனம் செய்து AI வீடியோ வெளியிட்டது தொடர்பாக காங்கிரஸ் மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பிரதமர் மோடியை பற்றி விமர்சித்து காங்கிரஸ் தகவல் தொழில் நுட்ப அணி AI வீடியோ வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.