புத்த பூர்ணிமாவை ஒட்டி பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், புத்தரின் வாழ்க்கை உலக மக்களுக்கு அன்பையும், அமைதியையும் போதிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதே போன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் நாட்டு மக்களுக்கு புத்த பூர்ணிமா வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.