தெலங்கானாவில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மாவோயிஸ்டுகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பத்ராத்ரி கொத்தகூடம் ((Bhadradri Kothagudem)) மாவட்டத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல் துறையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே வியாழக்கிழமை காலை பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அதில் மாவோயிஸ்டுகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், காவல்துறையை சேர்ந்த இருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுள் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.